top of page

Samarpanam Songs & Lyrics

                                 

யோகி ராம்சுரத்குமார்தன் 

யோகநிலையை நான் கேட்டேன்

யோகியோ தன் நாமம் தந்தான் 

யோகமோ அவன் மாயமோ அறியேன்

 

யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா.

யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா.
யோகிராம்சுரத் குமார் ஜெயகுருராயா


அழியும் வாழ்வின் விருப்பைக் கூட்டி
விழிகள் இரண்டும் நீரைப் பெருக்கித்
தெளிவிலாது துயரம் காட்டும் நமது உள்ளத்தில்
தெய்வரூபச் சுடரைக்கொண்டு
பழிகள் அகன்று அமைதி கொள்ள
அருவமான நினது நாமம் பாடி ஆடுவோம் - யோகிராம்சுரத்குமார்


எனது உனது என்னும் பிரிவு

நமது உள்ளம் என்றும் விலக்கி
ஒன்று உலகில் யாவும் ஒன்று
என்று காணவே
தனது நாமம் தந்த வள்ளல்
புனித பாதம் சரணம் கொண்டு
தரணி வாழ குருவின் நாமம் பாடி ஆடுவோம் - யோகிராம்சுரத்குமார்


நாளும் இளைத்துச் சாவை நோக்கும்
சாரமற்ற உடலின் வாழ்க்கை
நாதன் காட்டும் பாதை சென்றால்
சாவைக் கடக்கலாம்
நாமம் பாடும் இனிய சுவையில்
நாவும் மனதும் மயங்கி என்றும்
தேகப்பற்று அற்ற அந்த தேவராகலாம் - யோகிராம்சுரத்குமார்

கண்டு சொல்லாயோ கந்தா என்
சத்குரு நாதனை அருணையிலே நீ - கண்டு

 

என்றும் எங்கும் இருக்கும் என் நாதன்
என்நிலை அறிந்து அருளிட நீ - கண்டு


வாழ்வெனும் சமரில் சோர்ந்த என்நிலையை
சொல்லிட மாட்டாயோ கந்தா
ஆழ்நிலை உணர்விலும் என்குருநாதனை
பற்றிட பந்தம் விடுபட நீ - கண்டு


குறைந்த தென்வாழ்வு மெலிந்த தென்தேகம்

கூடிடச் சொல்லாயோ கந்தா
குறைகளை மறந்து என் நிலைதனுக் கிரங்கி
கூப்பிய கரந்தனை பற்றிட நீ - கண்டு


யோகிராம்சுரத்குமார் திவ்ய நாமம்
நிலைபெறச் செய்த என்னுயிர் நாதனின்
யோகஸ்ரீ நிலைதனை நான் அடைந்திடவே
அழுதிடும் என்நிலை அவனிடமே நீ - கண்டு


சிறுபிள்ளை என்றே சிரித்தே சென்றால்
சிவனை அழைத்தே செல்வாய் கந்தா
மலையுறை சிவன்சொல் செவி மடுப்பான் 

எம்மை திருவடி இருத்திட அவனிடமே நீ - கண்டு

யோகிராம்சுரத்குமார் ஆனந்த அழகாம்
யோகிஸ்ரீ ஆலய ஆஸ்ரமம் அழகாம் -யோகிராம்

 

அபயம் திருக்கரம் காட்டுதல் அழகாம்
அருளும் ஞானம் திருவடி அழகாம்
அவலம் நீக்கும் திருவிழி அழகாம்
அகந்தை போக்கும் ஆண்டவன் அழகாம் - யோகிராம்


தளிர்நடை பயிலும் பாங்கும் அழகாம்
தனித்தே குன்றென இருத்தல் அழகாம்
களிப்பொடு நடனம் ஆடுதல் அழகாம்
கதியாம் உயிர்க்கு காப்பவன் அழகாம் - யோகிராம்


விரிசடை நாதனின் வதனம் அழகாம்
விரிக்கும் விந்தைச் சொல்லும் அழகாம்
கனிவுறு விழியின் நோக்கும் அழகாம்

கலியுக தெய்வத்தின் நாமமும் அழகாம் - யோகிராம்


நாதனைக் கண்ட வாழ்வும் அழகாம்
நாதனைப் பற்றும் பக்தரும் அழகாம்
நாதனின் நாமம் சொல்பவர் அழகாம்
நாதனில் வாழ்வைப் பிணைப்பவர் அழகாம் - யோகிராம்

குருநாதன் நாதன்

யோகி ராம் சுரத் குமார் - குருநாதன்


நாமத்தை எமக்கு நல்கியே வாழ்வின்
சோகத்தை நீக்கிய அசோகன் என்நாதன் - குருநாதன்


கோமகன் நாமம் பாடிடும் நேரம்
கோகுல பிருந்தா வன சஞ்சாரம் - குருநாதன்


வேங்குழல் வேணு கோபாலன் என்நாதன்

வேந்தருக்கெல்லாம் வேந்தன் என்நாதன் - குருநாதன்


பார்க்கும் இடமெல்லாம் நாதன் என்நாதன்
பார்த்த சாரதியை ஆட்கொண்ட தேவன் - குருநாதன்


சிவனாய் நர்த்தனம் ஆடும் என்நாதன்

சிவசங்கரனை ஆட்கொண்ட தேவன் - குருநாதன்


முருகேசனுக்கு முடிசூட்டிய நாதன்
முழுமுதற் பொருளாம் தேவாதி தேவன் - குருநாதன்

நின்பணி இனியேதும் உண்டெனில்

என்மேனி அஃதொன்றே செய்யட்டும்
நின்பணி இனியேதும் இல்லெனில்

என்மேனி மண்ணோடு போகட்டும் - நின்பணி


என்னாவி இம்மேனி இருமட்டும்
நின்னாமம் ஒன்றே செப்பட்டும்
அண்ணா மலையான என்சுவாமி
அடியேனை அழித்து அருள்வாயே - நின்பணி


விண்ணேவி என்னாவி போமட்டும்

என்மேனி திருவடியில் இருக்கட்டும்
பொன்மேனி என்யோகி புகழ்மட்டும்

பூதலம் எங்குமே ஒலிக்கட்டும் - நின்பணி


குருநாதன் பெருஞ்சாந்தி அருள்வட்டம்
உலகணைய என்றுமே இருக்கட்டும்
குருயோகி ராம்சுரத்குமார் ஒன்றே

ஈரேழு புவனத்தின் ஈசன்தானே! - நின்பணி

கூவி அழைத்தால் குறைகள் தீர்ப்பான்

யோகி ராம்சுரத்குமார்

கூவி அழைத்தால் குறைகள் தீர்ப்பான்

யோகி ராம்சுரத்குமார்

தாவி அணையும் சோகம் வருங்கால்

தாள் நினைந்து விழிகள் சுரந்து              – கூவி

 

மனம் கலங்கும் மதியும் மயங்கும்

தினம் நடத்தும் வாழ்க்கைச் சமரில்

அன்பை உணர்ந்து வாழ்வின் உண்மைப்

பொருளைக் காண புவியில் வாழ

கூவி அழைத்தால் அருளைப் பொழிவான்

யோகி ராம்சுரத்குமார் – யோகி ராம்சுரத்குமார் – கூவி

 

கலி யுகத்தின் கருணா மூர்த்தி

விழி விரித்துக் காண எம்மை

பழி அகன்று பாவம் விலகி

எமை இழந்து இறைமை அடைந்திடக்

கூவி அழைத்தால் ஞானம் அருள்வான்

யோகி ராம்சுரத்குமார் – யோகி ராம்சுரத்குமார்  – கூவி

 

தாயும் அவனே குருவும் அவனே

தர்மம் காக்கும் தெய்வம் அவனே

போயும் வந்தும் தொடர்ந்த பிறவி

ஓயும் மட்டும் உருகி உருகிக்

கூவி அழைத்தால் தாவி அணைவான்

யோகி ராம்சுரத்குமார் – யோகி ராம்சுரத்குமார்  - கூவி

யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்


நின்னழகைக் கண்ட பின்னே

நெஞ்ச மெல்லாம் நிறைந்து போச்சே

மின்னலெனத் துள்ளுகின்ற

எண்ணமெல்லாம் இறந்து போச்சே

கண்ணழகைக் கண்ட பின்னே

காலமெல்லாம் நின்று போச்சே

கன்னலெனத் தித்திக்கும்

கருணைமொழி அருணை யோகி - யோகி ராம்சுரத்குமார்


ரகுகுல ராம னென்பர்

யதுகுல கிருஷ்ணென்பர்

வகை வகை தெய்வ மென்பர்

வரையற்ற மதங்களென்பர்

அனைவரையு யாரறிவர்

அருணைவாழ் மா யோகி

தனைக் கண்டதே போதும்

தவமாகும் தெய்வமாவோம் - யோகிராம்


ஆனந்தம் ஆனந்தம்

ஆடுவோம் பாடுவோம்

வானகமும் வையகமும்

வசமாச் சென்றாடுவோம்
மோனமதும் முழுமையும்

முதிர்ந்த நல்போதமும்

தானடைந் தோம்தவயோகி

தாள்பணிந் தேயாடுவோம் - யோகிராம்

எந்தநிலை ஆயினும் நமக்கோர் துயரமில்லை

சிந்தைதனில் சிவபோதப் பெருமான் இருக்கையிலே

யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் - எந்தநிலை


தந்தையென தரணியிலே தடத்தைக் காட்டிடுவான்

விந்தையான வாழ்வினிலே தனித்தே இருத்திடுவான்
சொந்தமென சொல்பவைதான் சொரூபத்தைக் காட்டிடுவான் எந்தையான இறைவனிலே நம்மைக் கரைத்திடுவான்

யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் - எந்தநிலை

அல்லலென ஒன்றுமில்லை அனைத்தும் ஆனந்தமே

அண்ணல்நமை அரவணைத்து ஆட்கொண்ட போதினிலே

உள்ளதெலாம் ஒன்றெனவே உணர்த்திடும் யோகியவன்

உள்ளத்திலே அமர்ந்த பின்னே என்றென்றும் ஆனந்தமே

யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் - எந்தநிலை


இம்மை மறுமையென வரும்பயம் போகிடுமே

இருமை கடந்துலவும் யோகம் ஆகிடுமே

நம்மை இழந்தென்றும் திருப்பாதத் துகளாவோம்

செம்மை செய்யும்குரு திருநாமம் சொல்வதாலே

யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் - எந்தநிலை

துயரமே தான்சூழும் துலங்காத புவிவாழ்வில்

மதுரமே தான் வேண்டும் மறைவிளக்கும் மாப்பொருளே

யோகி ராம்சுரத்குமார்!


அலைபாயும் மனம்வென்று அமைதியும் தானடைந்து

நிலையாவும் கடந்துலவும் பேரின்பம் தான்வேண்டும்

வினையாவும் செய்விக்கும் விமலனே வேந்தனே

எனையாளும் அருணைவாழ் மாதவா என்நாதா

யோகி ராம்சுரத்குமார் !


அப்பாலும் அப்பாலும் எனக்கடந்து சென்றாலும்

அப்போதும் என்முன்னே நின்றாடும் பூரணமே

தப்பாது அழித்தெம்மைத் திருவடியில் கரைத்திடுவாய்

ஒப்பேது மற்றதொரு மெய்ப்பொருளே என்நாதா

யோகி ராம்சுரத்குமார்!


நிறைவான தெம்வாழ்வு நின்னாமம் சிந்திக்க

இறைஞான மெய்யோகம் நித்யமாய் சித்திக்க

சுகமான பரவெளியின் பிரம்மாண்டம் சிறுவிழியில்

இதமாகக் காட்டுகின்ற தெய்வமே என்நாதா

யோகி ராம்சுரத்குமார் !

எங்கே இன்பம் எங்கே அமைதி

என்றே தேடும் நெஞ்சே

யோகி ராம்சுரத்குமார் அருணையில் இருப்பான்

ஓடி அவனிடம் சேர்வாய்

ஆனந்தம் திருவடி அமைதி அவன்மொழி

ஆனந்த நடம்புரி நெஞ்சே

காவடி ஆடிக் களிக்கும் பக்தர்போல்

சேவடி துதித்து நில் நெஞ்சே


துயர் மிகு உலகில் தூங்கவும் இயலா

துடித்திடும் என் மடநெஞ்சே

ஆதவன் சுடர்போல் இருளினை அகற்றும்

மாதவன் பெயர் சொல் நெஞ்சே


நாதமே அவன்நகை நம்புவர் தலைவன்

வேதமே போற்றும் இறைவன் - தற்

போதமே தந்திடும் புனிதன் இராமன்

ரூபமே என் குருநாதன்


ஜெயகுரு சத்குரு யோகி ராம்சுரத்குமார்

ஜெய ஜெய ஜெய குருராயா

உனைத்தொழ என்வினை ஓடி ஒளிந்திடும்

அனைத்துயிர் அன்பனே ராமா
ராமா ராமா ராமா யோகி ராம்

ராம சுரத்குமார் யோகி

ராமா ராமா ராமா யோகி ராம்

ராம சுரத்குமார் யோகி

bottom of page